2022.06.30 ஆம் திகதி ராபிததுல் ஆலமில் இஸ்லாமி மற்றும் மலேசிய பிரதமரின் மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெற்காசிய மற்றும் தென்மேல் ஆசிய 2022 ஆம் ஆண்டின் உலமாக்களுக்கான மாநாடு

ராபிததுல் ஆலமில் இஸ்லாமி (வேல்ட் முஸ்லிம் லீக்) மற்றும் மலேசிய பிரதமரின் மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெற்காசிய மற்றும் தென்மேல் ஆசிய 2022 ஆம் ஆண்டின் உலமாக்களுக்கான மாநாடு 2022.06.30 ம் திகதி மலேசியா கோலாலம்பூர் நகரத்தில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பில் அதன் பணிப்பாளர் கௌரவ இப்ராஹீம் அன்ஸார் உட்பட இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அதில் அவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தங்களுடைய கருத்துக்களை முன்வைத்ததுடன் உலமாக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

இவர்கள் இங்கு தெற்காசிய மற்றும் தென்மேல் ஆசியாவைச் சேர்ந்த பல முக்கிய உலமாக்களை சந்தித்ததோடு மலேசியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து தற்போதைய இலங்கையின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடினர். அதேபோன்று ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் ஆகியோர் மலேசிய பிரதமர் கௌரவ யாகூப் ஸப்ரி அவர்களையும் ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன