அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக்குழுவின் மாதாந்த ஒன்று கூடல்

2024.07.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் மாதாந்த ஒன்றுகூடலானது குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் ‎இடம்பெற்றது.

இதில் ஆலிம்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இவ்வொன்றுகூடலில் ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, அஷ்-ஷைக் இஸட்.எம். நுஃமான்‎, அஷ்-ஷைக் எம்.எஸ். ரியாஸ்‎, அஷ்-ஷைக் எம்.எம்.எம். ரிஸா, அஷ்-ஷைக் டி. ஹைதர் அலி ஆகியோருடன் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன