ACJU நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை நேரில் சென்று பார்வையிட்டனர் – அனுதாபச் செய்தியும் கையளிப்பு

2024.07.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக அன்னாரது உடல் வைக்கப்பட்டிருந்த கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, விஜயமளித்திருந்த ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் உறவுகளிடம் உத்தியோகபூர்வமாக அனுதாபச்செய்தி கையளிக்கப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் ஃபத்வா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், ஆலிம்கள் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன