2025.01.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் அகில இலங்கை காரிகள் சபையின் – (ACJQ) பிரதிநிதிகள் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது வருகை தந்திருந்த பிரமுகர்கள் தமது அமைப்பின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அதனால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் தெளிவுகளை வழங்கினர்.
அத்தோடு, இரு தரப்பினரிடையிலுமான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதுடன் நாட்டில் அல்-குர்ஆன் தொடர்பிலான நடவடிக்கைகளை மேம்படுத்த ஜம்இய்யாவிடமிருந்து அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களை தாம் ஆழமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இதில், ஜம்இய்யா சார்பில் உப தலைவர், பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.



– ACJU Media –



