2024.12.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவினரின் விஷேட ஒன்றுகூடலொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், அரபுக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு சில தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர், குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இதில் அஷ்-ஷைக் ரஜுஸ் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –



