அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், பாணந்துறை கிளை ஜம்இய்யா மற்றும் ஜாமிஉல் ஹைராத் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியன இணைந்து நடாத்திய இளைஞர்களுக்கான ‘வாழ்க்கைத் திறன் வழிகாட்டல் செயலமர்வு’

2024.11.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், பாணந்துறை கிளை ஜம்இய்யா மற்றும் ஜாமிஉல் ஹைராத் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியன இணைந்து நடாத்திய இளைஞர்களுக்கான ‘வாழ்க்கைத் திறன் வழிகாட்டல் செயலமர்வு’ பாணந்துறை, அம்பலாந்துவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் அம்பலாந்துவ ஜுமுஆ மஸ்ஜித் மஹல்லாவினை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் பிரதம இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் (ஹக்கானி), குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன