அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட போதை விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

2025.02.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவோருக்கான போதை விழிப்புணர்வூட்டல் மற்றும் உள வளமூட்டல் செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில், போதைப் பொருள் பாவனையின் விபரீதம், அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

இச்செயலமர்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன