ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு மற்றும் சிங்கள மொழியில் தஃவா பணியில் ஈடுபடும் ஆலிம்களிடையே இடம்பெற்ற ZOOM கலந்துரையாடல்

2024.05.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் சிங்கள மொழியில் தேர்ச்சிபெற்ற ஆலிம்கள் மற்றும் தஃவா பணியில் ஈடுபடுவோருக்கான விஷேட ஒன்றுகூடலொன்று ZOOM வாயிலாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில், நீண்டகாலமாக சிங்கள மொழியில் தஃவா பணியில் ஈடுபட்டுவரும் ஆலிம்கள் பாராட்டப்பட்டதோடு சவால்களை எதிர்கொண்டு இப்பணியினை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிவகைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

இதில் ஜம்இய்யா சார்பில் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எப்.எம். ஃபரூத் மற்றும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன