ஜம்இய்யாவின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யா மற்றும் அல்-ஹிதாயா பாடசாலை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற O/L பரீட்சாத்திகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு

2024.05.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யா மற்றும் அல்-ஹிதாயா பாடசாலை, கொழும்பு-10 ஆகியவற்றின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஜம்இய்யாவின் கல்விக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நல்லுபதேங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன், உபசெயலார் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு அஷ்-ஷைக் ஸல்மான் அவர்களால் விஷேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன