ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் நடைபெற்ற எஹலியகொடைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2024.01.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் எஹலியகொடை கலவிட்டிகொடை முத்தகீன் மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் முத்தகீன் வாலிபர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஹலியகொடைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு கலவிட்டிகொடை முத்தகீன் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இளைஞர்கள் விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், இளைஞர்கள் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், ஜம்இய்யாவின் உளவளத் துணை ஆலோசகர் சகோதரர் ரம்ஸி, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் ஜம்இய்யாவின் செயலகப் பிரிவின் உத்தியோகத்தர் அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன