அரபுக் கல்லூரிகளின் மேம்பாடு தொடர்பான திட்டங்களை தயாரிப்பதற்கான விசேட ஒன்றுகூடல்

2026 மே 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகளுக்கான பிரிவின் உறுப்பினர்களிடையிலான விசேட ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அரபுக் கல்லூரிகளின் நிர்வாக முறைமையில் மனிதவள மேலாண்மை, நிர்வாகம் மற்றும் கல்லூரிப் பதிவு, நிதி மேலாண்மை ஆகிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமானதும் மேம்பட்டதுமான நிலைக்கு மாற்றியமைப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் இவ்வொன்றுகூடலில் கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகளுக்கான பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் ஆகியோருடன் அப்பிரிவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன