ACJU அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் குழுக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2026 ஏப்ரல் 08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் குழுக்கூட்டம் அதன் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள் தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஆரம்பமாக, அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்கள் பிரிவின் வரலாறு மற்றும் செயற்பாடுகள் குறித்த அறிமுகத்தினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்களினால் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், அரபுக் கல்லூரிகளை பலப்படுத்தல் மற்றும் மார்க்கத்தை கற்ற ஆலிம்களை வலுவூட்டல் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, மத்ரஸாக்களின் சட்ட மற்றும் பதிவு சம்பந்தமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நிதி, நிர்வாகம், பாடத்திட்டம் மற்றும் மதிப்பாய்வு, முன்மொழியப்பட்ட செயற்திட்டங்கள் போன்ற அம்சங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில், தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள், கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், முக்கியத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் ஜம்இய்யா சார்பில் பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன