அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி ஜஸீல் அவர்களுக்கும் இடையிலான முக்கிய ZOOM கலந்துரையாடல்

2025 டிசம்பர் 17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி ஜஸீல் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று ZOOM வாயிலாக நடைபெற்றது.

இதில், கலாநிதி ஜஸீல் அவர்கள், தேசிய கல்வி ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைக்கான நிபுணர்கள் குழுவில் தான் உள்வாங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டதுடன் அரபுக் கல்லூரிகள் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்போது, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அரபுக்கல்லூரிகள் விவகாரம் தொடர்பில் ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் இது தொடர்பில் நிலவும் சவால்கள் குறித்தும் தெளிவுகளை வழங்கினர்.

எதிர்காலங்களில் நேரடியாக சந்திப்பினை மேற்கொண்டு இதுதொடர்பில் பல்வேறு விடயங்களை விரிவாக கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச்செயலாளர், உப தலைவர்கள், உப செயலாளர், அரபுக் கல்லூரிகள் விவாகாரக் குழுவின் செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன