அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் விசேட ஒன்றுகூடலொன்று 2026 ஜூன் 14 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடலில், நாடளாவிய ரீதியிலுள்ள அரபுக் கல்லூரிகளில் கற்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பொதுப் பரீட்சை வினாப் பத்திரத்தை தயார் செய்தல் மற்றும் தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ் மற்றும் ளுகத் அல்-அரபிய்யா ஆகிய பாடநெறிகளுக்கான கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இதில், அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் மற்றும் பிரிவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில், அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் முலப்பர், அஷ்-ஷைக் ரியாஸ் முஃப்தி, அஷ்-ஷைக் எம். அப்ராஸ் ஆகியோருடன் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –


