கனடா-மொன்ட்ரியால் நகர்-ஸலாஹுத்தீன் மஸ்ஜிதுடைய இமாம் அஷ்-ஷைக் ஜீல் ஸாதிக் மற்றும் UAE யின் ‘The Harmony Band’ கஸீதா குழுவினர் ஆகியோர் ஜம்இய்யாவுக்கு வருகை

2024.03.04ஆம் திகதி, லெபனானை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்பொழுது கனடா-மொன்ட்ரியால் நகர்-ஸலாஹுத்தீன் மஸ்ஜிதில் இமாமாக கடமையாற்றுபவருமான அஷ்-ஷைக் ஜீல் ஸாதிக் அவர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘The Harmony Band’ கஸீதா குழுவினர் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு சிநேகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன்போது வருகை தந்திருந்த பிரமுகர்களுக்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு தூய்மையான இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல்-ஜமாஆவின் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு எல்லா மனிதர்களோடும் நல்லுறவைப் பேணி வாழவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில் அஷ்-ஷைக் ஸப்ராஸ் பஹ்ஜீ மற்றும் அஷ்-ஷைக் நதீர் இல்மி ஆகியோர் வருகை தந்திருந்த பிரமுகர்கள் சார்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பத்வா குழுவின் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் அமீனுதீன் மற்றும் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் ஆகியோருடன் அஷ்-ஷைக் சிராஜ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன