கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

2023.09.05 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்கள்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சமகால வாழ்வியல் நிலைமைகள் கலந்துரையாடப்பட்டன. மேலும் பல்லின சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் கிழக்கு மாகாண மக்கள் நாட்டு மக்களுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குவர் என்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் அவர்கள் குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர், உப தலைவர்களான அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி மற்றும் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன