லிபியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம் தெரிவிப்பு

2023.09.15ஆம் திகதி அண்மையில் லிபியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினையிட்டு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச்செயலாளர், நிறைவேற்றுக்குழு மற்றும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அந்நாட்டு தூதரிடத்தில் அனுதாபச்செய்தி கையளிக்கப்பட்டது.
 
ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஊடகக்குழு செயலாளருமான அஷ்ஷைக் எம். பாழில் பாரூக், பிரஜைகள் விவகாரப் பிரிவின் பிரதான இணைப்பாளர் அஷ்ஷைக் நுஸ்ரத் ஆகியோர் இலங்கைக்கான லிபிய தூதரான நாஸர் வை.எம். அல்புர்ஜானியிடம் இந்த அனுதாபச் செய்தியினை நேரில் சென்று கையளித்தனர்.

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன