அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நோன்புப் பெருநாள் செய்தி – 2022 (1443)

ACJU/NGS/2022/106

அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்;களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் தமது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்துடன் இத்தருணத்தில் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் அனைத்து மக்களினதும் விமோசனத்திற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இந்நிலையிலிருந்து மீள முடியுமான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், ஏழைகள் மற்றும் அயலவர்களுக்கு முடியுமான உதவிகளை செய்து, அவர்களது கஷ்டங்களைப் போக்க சகல முஸ்லிம்களும் இத்தினங்களில் முன்வர வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியைத் தந்தருள்வானாக, நம் நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் அனைத்து நெருக்கடிகளையும், சோதனைகளையும் நீக்கியருள்வானாக! ஆமீன்.

تقبل الله منا ومنكم

 

முப்தி எம்.ஐ.எம். றிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன