பதுளை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாயல்களில் நிகழ்த்தப்பட்ட குத்பா பிரசங்கங்கள்

2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழு மற்றும் இளைஞர் விவகாரக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், பதுளை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், அம்மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாயல்களில் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன.

அந்த வகையில் வெலிமடை ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

குருத்தலாவை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

பதுளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவின் துணை செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

பதுளை, புவகொடமுல்ல, மஸ்ஜிதுல் ஜாமிஃ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

பண்டாரவளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் ஃபத்வா குழுவின் பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

பொரகஸ் ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் ஹக்கானி அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

சில்மியாபுர ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் ஃபத்வா  குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

பதுளை, போன்ஸோ ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

வெலிமடை, ரத்தம்ப ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்.

வெலிமடை, மஹதென்ன ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

ஜம்இய்யாவினால் பதுளை மாவட்டத்தினை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக மேற்படி ஜுமுஆ குத்பாக்கள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன