பதுளையிலுள்ள ஜம்இய்யாவின் கிளைகளுக்குட்பட்ட பாடசாலைகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான ஆன்மீக மற்றும் வலுவூட்டல் நிகழ்ச்சிகள்

2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழு மற்றும் இளைஞர் விவகாரக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், பதுளை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், அம்மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளுக்குட்பட்ட பாடசாலைகளை மையப்படுத்தி மாணவர்களுக்கான ஆன்மீக மற்றும் வலுவூட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

● அந்த வகையில் வெலிமடை மத்திய கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. வெலிமடை கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, இளைஞர் விவகாரக் குழுவின் பயிற்றுவிப்பாளர் சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ராபிஃ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

● குருத்தலாவ, தேசிய பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக ஜம்இய்யாவின் உப தலைவரும் பிரச்சாரக் குழுவின் செயலாளருமான அஷ்ஷைக் எச். உமர்தீன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சி குருத்தலாவ கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

● ஹாலிஎல, மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வு ஜம்இய்யாவின் பதுளை பிரதேசக் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

● பண்டாரவளை, ராஸிக் பரீட் பாடசாலையில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வு ஜம்இய்யாவின் பண்டாரவளை கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

● சில்மியாபுர, அல்-முர்ஷித் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். ஜம்இய்யாவின் சில்மியாபுர கிளையின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

● பதுளை, அல்-அத்னான் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வு ஜம்இய்யாவின் பதுளை பிராந்தியக் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

● பதுளை, பாத்திமா முஸ்லிம் மகளிர் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் மற்றும் இளைஞர் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். பதுளை பிராந்தியக் கிளையின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன