2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழு மற்றும் இளைஞர் விவகாரக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், பதுளை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், ‘சமூக பணியே எமது பணி’ எனும் தொனிப் பொருளிலான விசேட நிகழ்வொன்று வெலிமடை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான வெலிமடை பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி, ஃபத்வா குழுவின் பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான், அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் துணை செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், பதுளை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் எச்.எம்.எம். ஹிதாயத்துல்லாஹ், இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர், அஷ்-ஷைக் அப்துர் ராபிஃ, ஃபத்வா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், ஊடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –



