அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டக் கிளைகளின் பதவிதாங்குனர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்கள்

2025.05.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையக ஆளணியினரின் காத்தான்குடி விஜயத்தினை அடுத்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்ட ஜம்இய்யாக்களின் பதவிதாங்குனர்களுடனான சந்திப்புக்கள் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றன.

இவ்விரு கூட்டங்களிலும், குறித்த கிளைகளினது செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்குட்பட்ட பிரதேசக் கிளைகளின் செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன.

இக்கூட்டங்களில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டக் கிளைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன