2025 ஜூலை 25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் கம்பொல கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ‘Best Citizen-சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப் பொருளிலான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டன.
அந்த வகையில் கஹட்டபிட்டிய அல்-மினா முஸ்லிம் பாடசாலை, கம்பொல முஸ்லிம் பாடசாலை, கம்பொல ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் வலுவூட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மூன்று பாடசாலைகளிலிருந்தும் மொத்தமாக 233 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
அதனையடுத்து, தல்பிட்டிய ஜுமுஆ மஸ்ஜித், இலங்கவத்த ஜுமுஆ மஸ்ஜித், சக்கரகொட்டுவ ஜுமுஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாயல்களில் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மொத்தமாக 282 இளைஞர்களும், 356 பெற்றோர்களும் கலந்து பயன்பெற்றனர்.
இவ்வழிகாட்டல் நிகழ்வுகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர், சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், அஷ்-ஷைக் ஹப்ஸான், அஷ்-ஷைக் மபாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.



– ACJU Media –




