ACJU மத்திய குழுக் கூட்டத்தில் ஜுஸ்உ அம்ம தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் மாவட்டக் கிளைகளுக்கு கையளிப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய குழுக்கூட்டம் கௌரவ தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் கௌரவ பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் 2026 செப்டம்பர் 05, ஜம்இய்யா தலைமையக்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் மாவட்டக் கிளைகளின் செயற்பாடுகள், முன்னெடுப்புகள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, உம்மத் சர்வதேச நலன்புரி அமைப்பின் நிதிப் பங்களிப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட சுமார் 17,000 ஜுஸ்உ அம்ம தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் ஒவ்வொரு மாவட்டக் கிளைக்கும் குறிப்பிட்ட தொகையளவு வழங்கி வைக்கப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன