எகிப்தில் நடைபெற்றுவரும் 11 ஆவது தாருல் இஃப்தா சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பங்கேற்பதற்காக அதன் கௌரவ தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர், 2026 செப்டம்பர் 01ஆம் திகதி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
‘உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்’ எனும் தொனிப்பொருளில், சர்வதேச ஃபத்வா அமைப்புகளின் பொதுச் செயலகம் மற்றும் எகிப்திய ஃபத்வா மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.
எகிப்து ஃபத்வா மையத்தின் ஃபத்வா செயலாளர் ஷெய்க் கலாநிதி முஹம்மத் விஸாம் அப்பாஸ் ஹிழ்ர் அவர்கள் ஜம்இய்யாவின் பிரதிநிதிகளை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யா பிரதிநிதிகள் எகிப்திய ஃபத்வா மையத்திற்கு விஜயம் செய்து அதன் செயலாளர் ஷெய்க் ஹாஸிம் தாவூத் அவர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலில், எகிப்தில் முதுமானி (MA) பட்டப்படிப்பைத் தொடரும் இலங்கை மாணவர் ஸுஹைர் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, இலங்கை ஆலிம்களை ஃபத்வா துறையில் வலுவூட்டுவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.


– ACJU Media –



