‘பஹன’ ஊடக வலையமைப்பின் பிரமுகர்கள் மற்றும் ஜம்இய்யா தரப்பிடையே நடைபெற்ற சந்திப்பு

‘பஹன’ ஊடக வலையமைப்பின் பிரமுகர்கள் 2026 செப்டம்பர் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, பஹன ஊடக அமைப்பினர் தமது நிறுவனத்தின் இலக்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுகளை வழங்கியதுடன் பல்லின சமூக சமூகங்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

அத்தோடு, கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களினால் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பேசும் ‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’ எனும் நூலின் பிரதியும் இதன்போது ஜம்இய்யா தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது, சமூக நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன