நேபாளத்தில் வெள்ளப் பேரழிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளையடுத்து தமது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர், 2026 செப்டம்பர் 02ஆம் திகதி, கொழும்பிலுள்ள நேபாள தூதரகத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, இலங்கைக்கான நேபாள பொறுப்புத் தூதர் கௌரவ விஜய்குமார் ராவுத் அவர்களை சந்தித்து ஜம்இய்யாவின் இரங்கல் செய்தியை கையளித்தனர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

– ACJU Media –



