கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜித்தில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான ஒன்று கூடல் இன்று (25.11.2020 புதன்கிழமை) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலில் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் வாழும் மக்களின் நிலவரங்கள் அவதானத்தில் கொண்டு வரப்பட்டதுடன், பொதுவாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையும், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனமும் இணைந்து இவ்வுதவித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் நிவாரணங்களை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வுதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பையும் வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.

ஜெஸாக்குமுல்லாஹ் கைரன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன