2025 ஆகஸ்ட் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவாகாரக் குழுவினால் காத்தான்குடி, ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று குறித்த அரபிக் கல்லூரியில் நடாத்தப்பட்டது.
ஜம்இய்யாவின் காத்தான்குடி கிளை மற்றும் ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் 18க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு தொழிற்றுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டல்களை வழங்கினார்.

– ACJU Media –



