2026 ஜனவரி 22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினருக்கும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் கூட்டத்திற்கான திட்டமிடுதல் மற்றும் ஒவ்வொரு சிவில் சமூக அமைப்புக்கும் பொறுப்புகளை ஒதுக்குதல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இதில், 12 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளில் இருந்து 09 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், சமூக சேவைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நுபைல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –





