தெல்தோட்டையில் நடைபெற்ற ஜம்இய்யாவின் 2024 பெப்ரவரி மாதத்திற்கான நிறைவேற்றுக் குழுக்கூட்டம்

2024.02.16, 17, 18 ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் தெல்தோட்டையில் அமைந்துள்ள ‘ஸ்மார்ட் ஹெரிடேஜ்’ மண்டபத்தில் 05 அமர்வுகளாக நடைபெற்றது.

இதில் ஜம்இய்யாவின் 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு ஜம்இய்யாவின் உப பிரிவுகளின் கடந்த கால பணிகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் தொடர்பிலும் இணைப்பாளர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் உப தலைவர்கள், உப செயலாளர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் உட்பிரிவுகளின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிறைவேற்றுக் குழுக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், ஜம்இய்யாவின் தெல்தோட்டை மற்றும் கண்டி நகரக் கிளைகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கூட்டம் நடைபெற இடவசதிகளை ஏற்பாடு செய்த ‘ஸ்மார்ட் ஹெரிடேஜ்’ நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன