அஸ்கிரிய பீட அனுநாயக்க தேரர் மரியாதைக்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழு அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம்

2025 ஜூலை 23ஆம் திகதி, அஸ்கிரிய பீட அனுநாயக்க தேரர் மரியாதைக்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் மறைவை அடுத்து, அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று அஸ்கிரிய பீடத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது.

இதன்போது, ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் அங்குள்ள பீடாதிபதிகளிடம் தமது இரங்கலை தெரிவித்ததுடன் மறைந்த தேரருக்கான அனுதாபச் செய்தியையும் நேரில் கையளித்தனர்.

இதில் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ரிஸ்வான் ஆகியோருடன் ஜம்இய்யாவின் கண்டி நகர் கிளையின் உறுப்பினர்கள், கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன