சேனபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போதையிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்வு

2026 ஏப்ரல் 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில், போதையிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும், ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்வு சேனபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், மாணவர்கள் போதைக்கு அடிமையாவதற்கான காரண காரியங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதிலிருந்து மாணவர்களை தடுப்பதற்கான தீர்வுத் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.

இதில், குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 12 ஆசிரியர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன