2025 டிசம்பர் 04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அனர்த்த நிவாரணப் பணிகள் இடம்பெற்று வரும் கொழும்பிலுள்ள சில மஸ்ஜிதுகளுக்கு விஜயம் செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.
அந்த வகையில் கொலன்னாவ ஜுமுஆ மஸ்ஜித், வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் மீதோட்டமுல்ல ஜுமுஆ மஸ்ஜித் ஆகியவற்றிற்கு தலைவர் அவர்கள் விஜயம் செய்து நிவாரணப் பணிகளை பார்வையிட்டதுடன் குறித்த மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் மற்றும் நிவாரணக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


– ACJU Media –


