டிட்வா – அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெற்ற ஆலிம்களுக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கி வைப்பு

2026 பெப்ரவரி 17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலிம்கள் விவகாரப் பிரிவு மற்றும் சமூக சேவைப்பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் டிட்வா – அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெற்ற ஆலிம்களுக்கான நிவாரண உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில், SLMCC – CHICAGO மற்றும் GOODNESS FOUNDATION ஆகிய சர்வதேச நலன்புரி அமைப்புகளின் நிதிப்பங்களிப்பில் அனர்த்த நிலைமைகளினால் அதிகம் பாதிப்பிற்குள்ளான நாட்டின் 19 மாவட்டங்களை சேர்ந்த 464 ஆலிம்களுக்கு தலா 25,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, ஆலிம்கள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன