2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவின் புதிய உறுப்பினர் குழுவினருடனான அறிமுகக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் தஃவா பிரிவின் செயற்பாடுகளை மேம்படுத்தல் மற்றும் வீரியப்படுத்தல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் ஆலிம்களுக்கான ரமழான் விசேட செயலமர்வொன்றினை பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், தஃவாப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான், பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ. யாஸீன் ஆகியோருடன் தஃவா பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



– ACJU Media –




