அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்

2026 ஜனவரி 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், ஜம்இய்யாவினால் நடத்தப்படவுள்ள ‘தஜ்தீத் – ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய புதிய பயணம்’ மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பதுடன் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள், வேலைத்திட்டங்கள் குறித்தும் பேசப்பப்பட்டன.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப பொதுச் செயலாளர்கள், ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன