2025.06.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் ஜம்இய்யா தலைமையகத்தின் கடந்த மாத செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –