ACJU/NGS/2023/224
2023.09.14 (1445.02.28)
2023.09.10 ஆம் திகதி லிபியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரண்டு அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதோடு பாரிய உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த வெள்ளப் பேரழிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கூடிய விரைவில் குணமடைந்து தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் பிராரத்தனை செய்கிறது.
இலங்கை முஸ்லிம்கள், ஆலிம்கள் உட்பட இலங்கைவாழ் மக்கள் அனைவரினது நல்லெண்ணங்களும் பிரார்த்தனைகளும் லிபிய மக்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் எப்போதும் இருக்கும் என்று நாம் உறுதியளிக்கிறோம். இக்கட்டான இச்சூழ்நிலையிலிந்து வெகுவிரைவில் அவர்கள் மீண்டு மானசீக, பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும் என்று நாம் ஆதரவு வைக்கிறோம்.
அதேவேளை உத்தியோகபூர்வ முறைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயலுமான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் ஜம்இய்யா அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறது.
அல்லாஹுதஆலா இப்பகுதிவாழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து இழப்புகளிலிருந்து அவசரமாக மீண்டுவர துணைநிற்பதோடு அவர்களுக்கு அழகிய பொறுமையையும் அமைதியையும் வழங்குவானாக!
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா






