கம்பஹா மாவட்ட ஜம்இய்யாவின் வருடாந்த ஒன்றுகூடலில் அகில ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் பங்கேற்பு

2025.07.19ஆம் திகதி, ஜம்இய்யாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் வருடாந்த ஒன்றுகூடலில் அகில ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த ஒன்றுகூடலானது மல்வான – செலான் பங்களாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், உரையாற்றிய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள், ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள், முன்னெடுப்புகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் ஆலிம்கள் சமூக பணிகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றியும் விளக்கமளித்தார்.

இவ்வொன்றுகூடலில் கம்பஹா மாவட்டக் கிளையின் தலைவர், செயலாளர், நிர்வாகிகளுடன் மாவட்டத்திலுள்ள 08 பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன