‘இளைஞர்களை வழிநடத்துவதில் எமது பங்களிப்பு’ எனும் தலைப்பில் கம்பளை பிரதேச மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்வு

2025 நவம்பர் 11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ‘இளைஞர்களை வழிநடத்துவதில் எமது பங்களிப்பு’ எனும் தலைப்பிலான விசேட நிகழ்வு ஆன்டியக்கடவத்த, அப்ரார் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், கம்பளை பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுகளில் கடமையாற்றும் 28 இமாம்களும், 60க்கும் மேற்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளும் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன