அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஹலால் இறுதிச் சான்றிதழ் பேரவை ஆகியவற்றிற்கிடையில் நடைபெற்ற சந்திப்பு

2024.02.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஹலால் இறுதிச் சான்றிதழ் பேரவை ஆகியவற்றிற்கிடையிலான சந்திப்பு தெல்தோட்டையில் அமைந்துள்ள ‘ஸ்மார்ட் ஹெரிடேஜ்’ மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஹலால் பேரவையின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் தொடர்பில் அதன் பிரமுகர்களால் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஹலால் பேரவையின் பணிப்பாளர் ஆகிப் ஏ. வஹ்ஹாப், இணக்கப்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மொஹிதீன், அஷ்-ஷைக் இன்ஷாப் மஷ_த் மற்றும் அஷ்-ஷைக் எம். எம். இர்பான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜம்இய்யாவின் சார்பில் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம் அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோருடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன