தமிழ்நாடு மத்ரஸத்துந் நிஸ்வான் அரபுக் கல்லூரியின் செயலாளர் மௌலானா முஹம்மத் உமர் சிராஜுத்தீன் மற்றும் சகோதரர் ஸய்யித் ரபீயுத்தீன் ஆகியோர் ஜம்இய்யாவுக்கு வருகை

2023.10.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் தமிழ்நாடு மத்ரஸத்துந் நிஸ்வான் அரபுக் கல்லூரியின் செயலாளர் மௌலானா முஹம்மத் உமர் சிராஜுத்தீன் மற்றும் சகோதரர் ஸய்யித் ரபீயுத்தீன் ஆகியோர் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு வருகை தந்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக பதில் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அடுத்து ஜம்இய்யாவில் கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்கு மௌலானா அவர்களினால் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுக்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பதில் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் எம்.என்.எம். ஸைபுல்லாஹ் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன