2026 பெப்ரவரி 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவின் உப பிறைக் குழு ஆகியவையிடையிலான விசேட சந்திப்பொன்று புத்தளம், முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், ஹிஜ்ரி 1447 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பிலான சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில், புத்தளம் மாவட்ட ஜம்இய்யா சார்பில் 20 ஆலிம்கள் மற்றும் 10 முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


– ACJU Media –



