அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு மற்றும் புத்தளம் கொட்டாரமுல்ல பிரதேசக் கிளையின் உப பிறைக் குழு ஆகியவையிடையே இடம்பெற்ற விசேட சந்திப்பு

2026 பெப்ரவரி 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு மற்றும் புத்தளம் கொட்டாரமுல்ல பிரதேசக் கிளையின் உப பிறைக் குழு ஆகியவையிடையிலான விசேட சந்திப்பு ஒன்று மின்ஹாஜிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக்குழு பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் ஹிஜ்ரி 1447 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அது தொடர்பிலான சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் கொட்டாரமுல்ல கிளையின் 12 ஆலிம்கள், 10 மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் மின்ஹாஜிய்யா அரபுக் கல்லூரியில் கற்கும் 20 இறுதி வருட மாணவர்கள் என பலர் கலந்து பயன்பெற்றனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன