சமூகத்தை மையப்படுத்திய மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் இமாம் மேம்பாட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்து

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குமான திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டம், 2026 நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கண்டி – ஹெந்தஸ்ஸ, இனாயா கார்டனில் (G’CEC) நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஸம்-ஸம் நிறுவனம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றுக்கிடையில், மஸ்ஜித் இமாம்களின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் தேசிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் ஸம்-ஸம் ஆகிய இரு நிறுவனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நீண்டகாலத் திட்டமிடலின் அடிப்படையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பின்வரும் உயரிய நோக்கங்களின் அடிப்படையில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது:

01. திறமையும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாகவும், மக்களுடன் நல்ல தொடர்பைப் பேணுபவர்களாகவும், தேவையான நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் சமூகத்தின் அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் பெற்றவர்களாகவும் இமாம்களை உருவாக்குதல்.

02. சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு, தெளிவான முறைமைகள், நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களை முறையாகப் பயன்படுத்தும் திறன் கொண்டதாக மஸ்ஜித்களை மாற்றுதல்.

03. மஸ்ஜிதுடன் அதிகமாக இணைந்து செயற்படுதல், உள்ளுர் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளில் பங்கேற்றல், மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் குறைப்பதில் சமூகமும் மஸ்ஜிதும் கூட்டாகப் பங்களித்தல்.

இந்நிகழ்வில் ஸம்-ஸம் நிறுவனம் சார்பில் தலைவர் எம்.எச்.எம். முஃப்தி யூசுப் மற்றும் திட்ட ஆலோசகர் சகோதரர் நவாஸ் ஆகியோருடன் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அக்ரம் நூராமித் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன