ACJU/NGS/2026/129
2026.11.04 (1448.05.23)
கல்எலிய பிரதேசத்தினை பிறப்பிடமாகவும் கொழும்பு, மட்டக்குளிய பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஆலிம் அஷ்-ஷைக் முஹம்மத் தஸ்லீம் (பாரி) (اللهم اغفرله وارحمه) அவர்களது மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகவும், மஸ்ஜித் இமாமாகவும், இஸ்லாமிய கல்விப் பணியில் நீண்டகாலம் ஆசிரியராகவும் கடமை புரிந்ததுடன் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்த ஒருவராவார்.
மேலும் கொழும்பு பெரிய பள்ளிவாயல், மாதம்பிட்டிய ஜும்ஆப் பள்ளிவாயல், வத்தல்பொல பள்ளிவாயல், பாணந்துறை பள்ளிவாயல், மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களில் இமாமாக கடமையாற்றிய அன்னார், கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு, தேசிய ஷூரா சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். இந்நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹு தஆலா அவருடைய பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக!
அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)”
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


