2025.06.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையக ஆளணியினரின் காத்தான்குடி விஜயத்தினை அடுத்து அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட்டன.
அந்த வகையில் காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் மாணவர்களுக்கு காலை ஆராதனையின் போது விஷேட சொற்பொழிவாற்றியதுடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.
அதேவேளை, காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் உயர்கல்விக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் அவர்களும், அல்-ஹிரா மகா வித்தியாலயத்தில் ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்களும், ஹிழ்ரிய்யாஹ் மகா வித்தியாலயத்தில் இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்களும், ஸாவியா பெண்கள் பாடசாலையில் இளைஞர் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் அவர்களும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகளை நடாத்தினார்கள்.
– ACJU Media –