களுத்துறை மாவட்டத்திலுள்ள அரபிக் கல்லூரிகளில் கற்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

2025.07.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் ஏற்பாட்டில், களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் களுத்துறை மாவட்டத்திலுள்ள அரபிக் கல்லூரிகளில் கற்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று பாணந்துறை, தீனிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அஷ்-ஷைக் அல்-காரி நஸ்மீர் அவர்களினால் அல்-குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டதனை தொடர்ந்து தீனிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷைக் ரிபாய் (தீனி) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வரவேற்புரையினை அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் அவர்களினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் தலைமையுரையினை நிகழ்த்தினார்.

தலைமையுரையினை தொடர்ந்து, ஜம்இய்யாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களால் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அவற்றின் பின்னணிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டன.

அடுத்ததாக ‘அரபிக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகளும், அவற்றை அடைந்து கொள்வதற்கான வழிகளும்’ எனும் தொனிப்பொருளில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் அவர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுமுகாமையாளர் சகோதரர் ஜவாஹிர் சாலி அவர்கள் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளின் முக்கியத்துவங்களை சுட்டிக்காட்டியதுடன் வெற்றிகரமாக அவற்றிற்கு தயாராவதற்கான வழிகாட்டல்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

அதனையடுத்து, அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் அவர்களால் அரபு மொழியின் முக்கியத்துவம் குறித்த தெளிவுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ‘இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தீர்ப்பதில் ஆலிம்களின் பங்கு’ எனும் தலைப்பில் மாணவர்கள் முன்னிலையில் உரையொன்றும் நிகழ்த்தினார்.

பொதுச் செயலாளரின் உரையையடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்களால் ஃபத்வாக் குழு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘மன்ஹஜ்’ கையேடு பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

இறுதியாக, களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் அபுல் கலாம் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இவ்வழிகாட்டல் நிகழ்வில் பாணந்துறை தீனிய்யா அரபுக் கல்லூரியிலிருந்து 23 மாணவர்களும், அட்டுலுகம ஜாமிஆ இனாமுல் ஹஸன் அரபுக் கல்லூரியிலிருந்து 15 மாணவர்களும், வெலிப்பன்ன தஃவத்துல் ஹுதா அரபுக் கல்லூரியிலிருந்து 13 மாணவர்களும், தர்கா நகர் இழ்ஹாருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியிலிருந்து 08 மாணவர்களும், மொரட்டுவ தாருல் முத்தகீன் அரபுக் கல்லூரியிலிருந்து 07 மாணவர்களும் என மொத்தமாக 66 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் களுத்துறை மாவட்டக் கிளை, பாணந்துறை பிரதேசக் கிளை மற்றும் தர்கா நகர் கிளை ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்துடன் களுத்துறை மாவட்ட அரபுக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களும் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன