2025 டிசம்பர் 24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் ஜம்இய்யாவின் கல்குடா கிளையின் நிர்வாகிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
கல்குடா பிரதேசத்தில் சமூக அக்கறையுள்ளவர்களால் காஸாவுக்கு அனுப்புவதற்கென சேகரிக்கப்பட்ட நிதியினை கல்குடா கிளை ஜம்இய்யா பொறுப்பேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச பள்ளிவாயல்கள் மற்றும் சமூக அமைப்புகள் வேண்டிக் கொண்டதால் குறித்த நிதியினை தாம் பொறுப்பேற்றதாக வருகை தந்திருந்த கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் கிளை நிர்வாகிகளினால் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர், உப செயலாளர்கள், உப பொருளார் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.



– ACJU Media –


